பால் குடிக்கும் போது இதையெல்லாம் மட்டும் சேர்த்து சாப்பிடாதிங்க.! உஷார் தகவல்.! - Seithipunal
Seithipunal


பால் நமது குழந்தை பருவம் முதல் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த ஒரு உணவாகும். இதில் புரோட்டின், கால்சியம், வைட்டமின்கள் போன்ற  உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்து இருக்கின்றன. எந்த வயதினருக்கும் ஏற்ற ஒரு சத்தான உணவு பாலாகும். ஆனாலும் பாலை சில பொருட்களுடன் சாப்பிட்டால் அது நமக்கு  உடல் உபாதைகளை ஏற்படுத்தும். அவை எந்தெந்த பொருட்கள் என்று பார்க்கலாம்.

அசைவ உணவுகளுடன் பாலை சேர்த்து சாப்பிட்டால் அஜீரண கோளாறு, வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படலாம். மீன், கோழி, இறைச்சி ஆகியவற்றுடன் பாலை சேர்த்து சாப்பிடுவது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் மற்றொரு உணவான கீரையையும் பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. இவற்றில் இருக்கும் செல்லுலோஸ் உணவு செரிமானத்தை தாமதப்படுத்தும் எனவே இவற்றை பாலுடன் சேர்ந்து சாப்பிடுவது செரிமான கோளாறுகளை உருவாக்கும். மேலும் கீரையிலிருக்கும் டானின் என்னும் மூலக்கூறு பாலை திரளச்செய்யும் இதனால் வயிற்று கோளாறுகள் ஏற்படும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தயிர் மற்றும் மோர் போன்ற புளிப்பு உணவுகளை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது நமது உடலுக்கு கேடானதாகும். தயிர் மற்றும் மோர் ஆகிய இரண்டுமே பாலில் இருந்து எடுக்கப்பட்டாலும் அவற்றின் தன்மை மாறுபடுவதால் இவற்றை சாப்பிடுவது வயிற்று கோளாறு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே பால் மற்றும் தயிர் மோர் போன்ற புளிப்பு உணவுகளுக்கு இடையே குறைந்தது அரை மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

 தர்பூசணியிடனும் பாலை சேர்த்து சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் . தர்பூசணி சாப்பிட்ட பிறகு பால் குடித்தால் அது வயிற்றுக்குள் அசவுகரியத்தை ஏற்படுத்துவதோடு  வாயு தொல்லையையும் ஏற்படுத்துவதாக  மருத்துவர்கள் கூறுகின்றனர்

 

 உடல் எடையை அதிகரிக்க பெரும்பாலும் பாலுடன்  பழம் சேர்த்து சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது . ஆனாலும் இது செரிமானத்திற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும்  அதனால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும் . எனவே நீங்கள் மில்க் ஷேக் சாப்பிட்டாலும்  அவற்றுடன் இலவங்கப்பட்டை அல்லது  ஜாதிக்காய் பொடியை சேர்த்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Foods that should not be taken with milk


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->