'சம்மர் டைம்'ல உங்க குழந்தைங்க ஆரோக்கியமா இருக்க எந்தெந்த பழங்கள் சாப்பிலாம்.? வாங்க தெரிஞ்சிக்கலாம்!
Fruits that children should eat for health during summer
கோடை காலம் என்றாலே குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தான். விடுமுறை காலங்களில் தங்களது நண்பர்களுடன் விளையாட்டு, ஆட்டம், பாட்டம் என அமர்க்களப்படுத்தி விடுவார்கள். குழந்தைகள் அளவில்லா மகிழ்ச்சியிலிருக்கும் அந்த காலங்களில் தான் குழந்தைகளுக்கு உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படும். கோடை காலங்களில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் அவர்களை எந்த நோயும் தாக்காமலிருக்க என்னென்ன பழங்கள் சாப்பிட கொடுக்கலாம் என்று பார்ப்போம்.
கோடை காலங்களில் குழந்தைகளை நோய் தொற்று மற்றும் கிருமி தொற்றிலிருந்து பாதுகாக்க அவர்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவுகளை கொடுக்க வேண்டும். ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மாதுளை பழங்களை கொடுப்பதன் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கலாம்.
கோடை காலங்களில் குழந்தைகளுக்கு அதிக அளவில் தர்பூசணி பழங்களை சாப்பிட கொடுக்க வேண்டும். குழந்தைகள் அதிகமாக விளையாடும் காலங்களில் அவர்களுக்கு நீரிழப்பு ஏற்படக்கூடும். தர்பூசணி பழங்களை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் அந்த நீரிழப்பினை சமன் செய்யலாம்.
கோடை காலங்களில் உடல் உஷ்ணத்தின் காரணமாக குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனைத் தவிர்க்க குழந்தைகளுக்கு சப்போட்டா பழங்களை கொடுக்கலாம். இதன் மூலம் அவர்களின் உடல் சூடு தணிவதோடு ரத்த ஓட்டமும் சீராகும்.
நெல்லிக்காயில் அதிகமான வைட்டமின் சி உள்ளது. மேலும் இதில் இரும்பு சத்தும் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இரத்த விருத்தியை அதிகரிக்கும். பெரிய நெல்லிக்காயை குழந்தைகளுக்கு உப்பு மற்றும் மஞ்சள் கலந்து வேக வைத்து கொடுக்க வேண்டும்.
நம் பகுதிகளில் எளிதாக கிடைக்கும் கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி வைட்டமின் பி மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு உடலுக்கு தேவையான வைட்டமின்களும் கிடைக்கிறது. மேலும் இதில் இருக்கக்கூடிய கால்சியம் உடல் உறுதி பெறவும் எலும்புகள் வலுவடையும் உதவும்.
English Summary
Fruits that children should eat for health during summer