ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் இத்தனை பிரச்சனைகளா? - Seithipunal
Seithipunal


தற்போதைய காலகட்டத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உடல்நிலை சரியில்லாமல் போவதுடன் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகிறது. அது என்ன என்பது குறித்தும், அதற்கான தேர்வினையும் இஞ்சுக்கு காண்போம்.

ஒரே இடத்தில் தொடர்ந்து 8 முதல் 10 மணி நேரம் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தால், உங்கள் வயிற்றைச் சுற்றி தொப்பை இருக்கும். நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்வதால் கொழுப்பு அதிகரிக்கும். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 நிமிடங்கள் இடைவெளி எடுத்து, கொஞ்சம் நடக்க பழக வேண்டும். இதைச் செய்தால் உங்கள் எடை கண்டிப்பாக கட்டுக்குள் இருக்கும்.

இந்த உடல் கொழுப்பைக் குறைக்க உங்கள் தினசரி உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும். இது அதிக உணவை சாப்பிடுவதைத் தடுக்கிறது. இதன் காரணமாக, உங்கள் எடை படிப்படியாகக் குறையத் தொடங்குவதை நீங்கள் காணலாம்.

வீட்டில் இருந்து ஒரே இடத்தில் வேலை செய்யும் போது அதிகம் சாப்பிடுவது வழக்கம். இதனால், உண்டாகும் எடை அதிகரிப்பை தவிர்க்க முடியாதது. ஆகவே, இதைத் தவிர்க்க, வேலை செய்யும் போது முடிந்தவரை தண்ணீர் குடியுங்கள். அது பசியைக் குறைப்பது மட்டுமின்றி, எடையைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே, ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். குறிப்பாக காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடியுங்கள். இது தொப்பை மற்றும் இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பைக் குறைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

health tips for same place work long time


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->