கோடை காலங்களில் நம் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க.... இதோசில டிப்ஸ்! - Seithipunal
Seithipunal


கோடை காலம் வந்து விட்டாலே  நம் அனைவருக்கும் நம்மை அறியாமல் ஒரு பயம் தொற்றிக் கொள்ளும். அது இந்தக் கோடையை எப்படி நல்ல உடல் நிலையோடு சமாளிக்க போகிறோம் என்பதுதான். அதுவும் கோடை காலத்தில் நம் உடல் உறுப்புக்களில் முதன்மையான உறுப்பான கண்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படும். கண் சிவத்தல், கண்களில் இருந்து நீர் வடிவது, கண் எரிச்சல், மெட்ராஸ் ஐ போன்ற தொற்றுகள் கோடை காலத்தில் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்துபவை. கணிப்பொறியில் வேலை செய்பவர்களை தவிர மற்ற நபர்களுக்கும் இது போன்ற பாதிப்புகள் ஏற்படும் இவற்றை எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் என பார்ப்போம்.

கோடை வெயிலில் நம் கண்களின் நலனை பாதுகாக்க அதிக அளவில் நீர் குடிக்க வேண்டும். நம் உடலானது நீரற்றத்துடன் இருக்கும் போது ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்  இது கண்களுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து நம் கண்களை காக்க பயன்படுகிறது.

அதிகமான வெயிலில் வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால்  குளிரூட்டப்பட்ட கண்ணாடிகளை அணிந்து கொள்வது நம் கண்களை எரிச்சலில் இருந்து பாதுகாக்கும். மேலும் இதே கண்களை தூசு மற்றும் பூச்சி போன்ற பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்க உதவுகிறது.

உடல் சுத்தமும் கண்களின் பாதுகாப்பிற்கு முக்கியமான ஒன்றாகும். நம் உடலை தூய்மையாக வைத்துக் கொள்வதன் மூலம் கண்கள் பாதிக்கப்படுவதை தடுக்கலாம். தலை சுத்தம் கண்களின் பாதுகாப்பிற்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று எனவே கோடை காலங்களில் குறைந்தது வாரத்திற்கு மூன்று முறையாவது குளிக்க வேண்டும்.

காய்கறிகள் பழங்கள் போன்ற வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வது நம் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். அலுவலகம் செல்லும்போதும் கேரட், தக்காளி, வெள்ளரிக்காய் போன்றவற்றை எடுத்துச் சென்று சாப்பிட்டு வரலாம்.

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது கோடை நேரத்தில் கண்டிப்பாக 6 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும். இந்த உறக்கத்தின் மூலம் கண்களுக்கு கிடைக்கின்ற ஓய்வானது  அவை புத்துணர்வுடன் செயல்படுவதற்கு உதவும். மேலும் கண்கள் ஏற்படும் மற்ற பார்வை குறைபாடுகள் போன்ற பிரச்சனைகளுக்கு அருகில் உள்ள கண் மருத்துவரை சந்தித்து ஆலோசிப்பது நலம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Here are some ways to protect our eye health during summers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->