முந்திரி கொட்டையின் வரலாறும், சிறப்பும்!! வெளிநாட்டினர் இதன் மீது கொண்ட ஆவல் பற்றி தெரியுமா?! - Seithipunal
Seithipunal


இதை கப்பல் வித்தான் கொட்டை என்றும் கூறுவர்.வணிகத்திற்காக வந்த பிற நாட்டினர் இதன் சுவையால் ஈர்க்கப் பட்டு கப்பலை விற்று இதை உண்டதாக கூறுவர்.

போலிப் பழத்திற்கு வெளியே, சிறுநீரக வடிவில் காணப்படும் உண்மைப்பழமானது கடினமான ஒரு வெளி உறையையும், உள்ளே ஒரு விதையையும் கொண்டிருக்கும். அந்த விதையே பொது வழக்கில் முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகின்றது. 

இது ஒரு தாவரவியலாளர்களின் பார்வையில் உண்மையான கொட்டை இல்லாவிட்டாலும் கூட, சமையல்சார் நிலையில் கொட்டை எனவே அறியப்படுகின்றது. 

இந்த முந்திர்க்கொட்டையைச் சூழவுள்ள கடினமான இரட்டை ஓட்டில் ஒவ்வாமையை உருவாக்கக் கூடிய, தோலில் நமைச்சலைத் தரக்கூடிய சில பதார்த்தங்களைக் கொண்டுள்ளது. 

சரியான முறையில் வறுத்து பதப்படுத்தப்படும்போது, இந்தப் பதார்த்தங்கள் சில அழிவடைந்துவிடும். ஆனாலும் பதப்படுத்தலின்போது மூடிய அறைக்குள் அதன் புகை வெளியேறுமாயின் நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே அவதானத்துடன் செய்யப்பட வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

history of mundhiri kottai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->