உங்க முகத்தில் எண்ணெய் வடிகிறதா..? அப்போ இந்த 'ஃபேஸ் பேக்' யூஸ் பண்ணுங்க..!! - Seithipunal
Seithipunal



எண்ணெய்ப் பசையுள்ள சருமத்திற்கு நமது வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே என்னென்ன ஃபேஸ்பேக் போடலாம் என்று இந்த பதிவில் காண்போம். 

புதினா ஃபேஸ் மாஸ்க் : புத்துணர்ச்சி தரக்கூடிய புதினா இலைகளை கழுவி மிக்சியில் போட்டு அரைத்து, அதன் சாறை மட்டும் வடிகட்டி எடுத்து அதனுடன் தேன் கலந்து, முகத்தை சுத்தமாக துடைத்துவிட்டு, இந்த கலவையை முகத்தில் தடவி 15 - 20 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். 

கடலைமாவு ஃபேஸ் மாஸ்க் : முதலில் முகத்தை க்ளென்சர் போட்டு சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் 1 டீஸ்பூன் கடலைமாவு, 1 டீஸ்பூன் தயிர் கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலரவிட்டு, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். 

முல்தானி மட்டி மற்றும் ரோஸ் வாட்டர் : 2 டீஸ்பூன் முல்தானி மட்டி, 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர், 1 டீஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவலாம். 

ஓட்ஸ் மற்றும் ரோஸ் வாட்டர் : 2 டீஸ்பூன் அளவு ஓட்ஸ் எடுத்து பொடி செய்துகொண்டு, அதில் சிறிது தேன் மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து ஊறவைத்து அதை முகத்தில் தடவி உலரவிட வேண்டும். 

வேப்பிலை மற்றும் மஞ்சள் : வேப்பிலை 10 இலைகள் மற்றும் சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து, இந்த கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள், அதிகப்படியான எண்ணெய்ப் பசை ஆகிய அனைத்தும் நீங்கி முகம் பொலிவு பெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Home Made Face Pack For Oily Skin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->