சர்க்கரை நோயாளிகள் எப்படி டீ குடிக்கணும்..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..! - Seithipunal
Seithipunal



சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் பால் சேர்த்து டீ, காஃபி குடிக்கவே கூடாது என்ற கருத்து பொதுவாக நிலவுகிறது. ஆனால் அதற்கு எந்த அறிவியல் பூர்வமான ஆதாரமும் இதுவரை சமர்ப்பிக்கப் படவில்லை என்பது தான் உண்மை.  

நீரிழிவு நோயாளிகளுக்கு முக்கியமானது அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவின் கிளைசெமிக் குறியீடு தான். மேலும் அவர்கள் உண்ணும் உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதாகவும், நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். அவ்வளவு தான். 

அதே போல பால் கலந்த டீ , காஃபி குடிக்கும்போது அதை அவர்கள் குடிக்கும் வழிமுறை மிக முக்கியம். நீரிழிவு நோயாளிகளுக்கு முதல் தேவை கொழுப்பு குறைந்த பால். அடுத்து வெள்ளை சர்க்கரையை தவிர்த்து விட்டு இயற்கை இனிப்பூட்டிகளை சேர்த்துக் கொள்ளலாம். 

இல்லையென்றால் கிரீன் டீ, பிளாக் காஃபி, லெமன் டீ, அல்லது ஹெர்பல் டீ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை குடிக்கலாம். மேலும் பால் கலந்த டீ குடித்த பிறகு ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து, நீங்கள் பால் குடிக்கும் அளவில் மாற்றங்களை கொண்டு வரலாம். 

மேலும் நீரிழிவு நோயாளிகள் கார்போஹைட்ரேட் எடுத்துக் கொள்ளும் அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதும் முக்கியம். பாலில் கார்போஹைட்ரேட் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் சுத்தமாக பால் கலந்த டீ அல்லது காஃபியை நிறுத்த வேண்டும் என்று எந்த ஆய்வும் தெரிவிக்கவில்லை. எனவே ரத்த சர்க்கரை அளவை உயர்த்தாத அளவுக்கு ஒரு அளவோடு பால் கலந்த டீ, காஃபியை குடிக்கலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How Does Diabetes Patients Drink Milk Tea


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->