நீங்கள் சிக்கன் லாலிபாப் பிரியர்களா.. வீட்டிலேயே ரெடி பண்ணலாம் வாங்க..! - Seithipunal
Seithipunal


சிக்கன் என்றாலே அனைத்து வயதினருக்கும் விருப்பம் தான். அதில் கூடுதல் சுவையாக சிக்கன் லாலிபாப் போன்ற டிஷ்கள் ஹோட்டல்களில் மிகவும் பிரபலம். சரி வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் லாலிபாப் செய்வது எப்படி என்று பார்ப்போம். 

தேவையானப் பொருட்கள்:

தயிர் - 2 டேபில் ஸ்புன்
இஞ்சி பூண்டு - 2 டேபில் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 3/4 டேபில் ஸ்பூன்
சீரகத்தூள் - 1 டேபில் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
முட்டை - 1
சோய சாஸ்- 1/2 டீஸ்பூன்
சிவப்பு உணவுக் கலர் - 1/4 டீஸ்பூன்
உப்பு -  தேவைக்கேற்ப 

செய்முறை:

கோழி கறிகளின் எழும்புகளின் சற்றியுள்ள சதைகளில் ஒரு கீறலாகா சதைகளை மேலாக இழுத்து விடவும்.முதலில் தயிரை, இஞ்சி பூண்டு விழுதுடன் மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கோழிக்கறியை போட்டு அரைத்த தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், சோயா சாஸ், உப்பு, ரெட் உணவு கலர் சேர்த்து நன்றாக கிளறி ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

பிறகு பொறிப்பதற்கு முன்னதாக ஒரு முட்டையை நன்றாக அடித்து ஊற்றி கிளறி அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் 5 நிமிடம் சதைபாகம் கீழிருப்பது போல் வைத்து வெந்தப்பின் 2 நிமிடம் முழுதாக எண்ணெயில் பொறித்தெடுத்தால் சுவையான சிக்கன் லாலிபாப் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to chicken lollipop in home made


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->