உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமா இருக்கா.? இந்த ஹோம் ரெமிடி ட்ரை பண்ணி பாருங்க.! - Seithipunal
Seithipunal


நமது வீட்டு சமையல் அறையில் நமக்கு  முதலில் பெரிய தொந்தரவாக இருப்பது  கரப்பான் பூச்சியாகும். இவை உணவுப் பொருள்களிருக்கும் இடம், பாத்திரங்கள் இருக்குமிடம் என எல்லா இடங்களிலும் சுற்றித்திரிந்து அசுத்தத்தை ஏற்படுத்தும். இதனை கட்டுப்படுத்துவதற்கு பல விதமான கெமிக்கல்கள் மற்றும் ஹிட் ஸ்ப்ரே  போன்றவை வந்தாலும் சில பேருக்கு சமையல் அறையில்  கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துவது அறவே பிடிக்காது‌. அவர்களுக்கும் பயன்படக்கூடிய வகையில் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு கரப்பான் பூச்சியை விரட்டும் மருந்தை எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்.

இந்த பொடியை தயாரிப்பதற்கு நமக்கு இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் இரண்டு ஸ்பூன் முகப்புவுடர் இந்த இரண்டும் போதுமானது. 

இவை இரண்டையும்  ஒன்றாக கலந்து ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து அதனை நான்காக மடக்கி ரப்பர் பேண்ட் போட்டு வைத்துக் கொள்ளலாம்.

இந்த பொட்டலத்தை கரப்பான் பூச்சி அதிகமாக இருக்கும் இடங்களில் வைத்து வர கரப்பான் பூச்சி அந்தப் பக்கம் எட்டிக் கூட பார்க்காது. அந்த அளவிற்கு இந்த பொடிக்கு மகிமை இருக்கிறது.

வீட்டின் சிங்குக்கு அடியில் கரப்பான் பூச்சி அதிகமாக இருந்தாலும் அங்கேயும் இந்த பொட்டலத்தை வைத்தால்  துர்நாற்றுமான வாடை வீசாமல் கரப்பான் பூச்சி தொல்லையில்லாமல் இருக்கும்.

துணிமணிகளை அடுக்கி வைத்திருக்கும் இடங்களிலும்  துணிகளுக்கிடையே இந்த பொட்டலங்களை போட்டு வைக்கும் போது கரப்பான் பூச்சி வராமல் தடுக்கலாம். மேலும் துர்நாற்றமும் வீசாது.

மேலும் இந்த பொட்டலத்திலிருக்கும் கலவை கரப்பான் பூச்சியை விரட்ட பயன்படுவது மட்டுமல்லாமல் இதனை வைத்து சுத்தம் செய்யவும் பயன்படுகிறது பேக்கிங் சோடா மற்றும் பவுடர் இரண்டையும் ஒன்றாக தண்ணீரில் கலந்து அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி நமது கேஸ் ஸ்டவ் மேடை மற்றும் சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to get rid of cockroaches from our home


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->