இடுப்பு வலியைப் போக்க உளுந்து களி - எப்படி செய்வது?
how to make ulunthu kali
இடுப்பு வலியைப் போக்க உளுந்து களி - எப்படி செய்வது?
தற்போதுள்ள பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனை அதிகளவில் உள்ளது. அதனை தீர்க்கும் ஒரு மருந்தாக முதியோர்கள் உளுந்து களியை செய்து கொடுத்துள்ளனர். இந்த உளுந்துக் களி பெண்களின் இடுப்பு வலிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதனால், இந்த உளுந்து காளியை செய்வது குறித்து இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருள்:-
உளுந்து
அரிசி
பனை வெல்லம்
ஏலக்காய்
சுக்குப்பொடி
நல்லெண்ணெய்
செய்முறை :-
முதலில் அடுப்பை பற்ற வைத்து கடாயில் உளுந்தை போட்டு வறுக்க வேண்டும். அதனுடன் சிறிதளவு அரிசியை சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில், பனை வெல்லத்தை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
அது நன்கு கொதித்ததும், வடிகட்டி கனமான பாத்திரத்தில் கொதிக்க வைக்க வேண்டும். கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள களிமாவு பொடியை கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி கட்டி விழாதவாறு கிண்ட வேண்டும்.
மாவு அரைப்பதத்தில் வெந்தவுடன் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி எண்ணெய் சேர்த்து கிளறி மாவு களி பதத்திற்கு வந்தவுடன் இறக்கு சுவைக்கவும்.