மணமணக்கும் மட்டன் குடல் வறுவல்!! செய்வது எப்படி?!
how to prepare mutton kudal varuval
என்ன தான் மட்டன் சூப், மட்டன் குருமா என பல ரெசிபிக்கள் செய்திருந்தாலும், மட்டன் குடலிற்கு என்று ஒரு தனிச்சுவை உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். எவ்வாறு செய்வதென பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - 6 தேக்கரண்டி,
மட்டன் குடல் - 1 (சிறியது)
மட்டன் மசாலா - 4 தேக்கரண்டி,
சின்னவெங்காயம் - 50 கிராம்,
காய்ந்த மிளகாய் - 4,
பச்சை மிளகாய் - 4,
கறிவேப்பிலை,
கொத்தமல்லி - சிறிதளவு,
மிளகு தூள் - தேவையான அளவு,
உப்பு - சிறிதளவு.

செய்முறை :
ஆட்டுக்குடலை நன்றாக சுத்தம் செய்து, நன்கு பொடிப்பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். அதனை தனியாக வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.
பொன்னிறமாக வெங்காயம் வதங்கிய பின்னர், வேகவைத்த குடலை வெங்காயத்துடன் சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றவும்.
பின் சிறிது உப்பு, மட்டன் மாஸாக, மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு தண்ணீர் உறிஞ்சிய பின்னர், கொத்தமல்லியை தூவி இறக்கி வைத்து பரிமாறவும்.
சுவையான குடல் வறுவல் ரெடி!!
English Summary
how to prepare mutton kudal varuval