கனிமொழிக்கு நன்றாக இந்தி பேச தெரியும் - பொதுவெளியில் போட்டுடைத்த மத்திய அமைச்சர்.!
unin minister l murugan says hindi language know to mp kanimozhi
சென்னை நங்கநல்லூரில் பா.ஜ.க. ஒன்றிய அலுவலக கட்டிடத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் இந்தி தெரியாததால் டெல்லியில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி குறிப்பிட்டு உள்ளது குறித்து கேள்வி கேட்டனர்.
அதற்கு அவர், "கனிமொழிக்கு நன்றாக இந்தி பேச தெரியும் என்றார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், பா.ஜ.க. கொள்கையின் அடிப்படையில் செயல்படும் ஒரு கட்சி. 14 கோடிக்கு மேல் உறுப்பினர்களைக் கொண்ட உலகிலேயே மிக பெரிய கட்சி.
இந்த கட்சி நாட்டுக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதை தான் செய்து வருகிறது. கட்சியின் நிறுவனரான ஷியாம் பிரசாத் முகர்ஜி காஷ்மீருக்கான தனி சட்டத்தை ரத்து செய்வதற்கு போராடி உயிர் துறந்தார். அதை பா.ஜ.க. இப்போது நிறைவேற்றியுள்ளது. இதேபோல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதி அளித்தோம்.
அதை நிறைவேற்றியுள்ளோம். பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றோம். அதுவும் இப்போது நிறைவேறி உள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது ரெயில்வே, வங்கி தேர்வுகளை தமிழில் எழுதும் உரிமையை கொண்டு வந்தோம். தமிழை வளர்க்கும் கட்சியாகவும் பா.ஜ.க. உள்ளது.
பிரதமர் மோடி தமிழுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஐ.நா.சபையில் பிரதமர் மோடி தமிழின் பெருமையை எடுத்து வைத்தார். திருக்குறள் 35 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் பரவி வருகிறது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
unin minister l murugan says hindi language know to mp kanimozhi