மாங்காய் பிரியரா நீங்கள்.? அப்போ இது உங்களுக்கு தான்.! கொட்டி கிடக்கும் நன்மைகள்.! - Seithipunal
Seithipunal


கோடை காலத்தில் கிராம புற மக்களின் நொறுக்கு தீனிகளில் ஒன்று  மாங்காயில்  மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து சாப்பிடுவதாகும். நாக்கில் எச்சி உஊறவைக்கும் இந்த சுவைக்கு அடிமையாகாதவர்களே இல்லை என கூறலாம் இப்படி சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது மாங்காயில் சர்க்கரையின் அளவு குறைவாகவே இருக்கிறது. இதன் காரணமாக சர்க்கரை நோயாளிகளையும் மாங்காயை சாப்பிடலாம். மேலும் இது ரத்த ஓட்டத்தை சீராக வைக்கவும் உதவுகிறது.

மாங்காயில் செரிமானத்திற்கு தேவையான அமிலங்கள் நிறைய இருக்கின்றன. இவை உடலின்  வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி  செரிமானத்தை மேம்படுத்துகின்றன. மாங்காய் சாப்பிடுவதால் செரிமானம் அதிகரிக்கிறது.

மாங்காயில் இருக்கும் அமிலத்தின் காரணமாக நோய் கிருமிகளை எதிர்த்து போராடு உதவுகிறது. மேலும் மாங்காய் கல்லீரலில் இருக்கும் தொற்றுக்களையும் குணப்படுத்தும் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

பச்சை மாங்காய் சாப்பிடுவதால் இது வாயில் வரும் துர்நாற்றம் தடுக்கப்படுகிறது. இது சுவாசத்தை புத்துணர்வாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் ஈறுகளிலிருந்து ரத்த கசிவு ஏற்படுவதையும் தடுக்க உதவுகிறது.

மாங்காயில் இருக்கக்கூடிய வைட்டமின் சி நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதன் காரணமாக நோய்களுக்கு எதிராக போராடும் ஆற்றலை உடலுக்கு கொடுக்கிறது. மேலும் மாங்காயில் சருமத்திற்கும் கூந்தலுக்கும் ஆரோக்கியத்தை தரக்கூடிய பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If you are a mango lover you must read this


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->