டக்குன்னு உடல் எடைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? உஷார்! - Seithipunal
Seithipunal


அடுத்த மாசம் முக்கியமான நிகழ்வு ஒன்னு இருக்கு அதுக்காக ஒரு மாசத்துக்குள்ள டக்குன்னு 5 கிலோ குறைக்கனும் என்று சிலப் பேர் சொல்லி கேட்டிருப்போம்! அது போல செய்யலாமா? செய்தால் என்ன விளைவுகள் நடக்கும்!

 உடல் எடைக் குறைப்பதற்கு முக்கியமாக உடலில் மெட்டபாலிஸம் என்ற வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பது தான் முதல் படி. ஆனால் இந்த குறுகிய கால அளவில் மேற்கொள்கிற டயட்டினால் நாம் சட்டென்று நாம் எடுத்து கொள்ளும் உணவை குறைப்பதினால் இதற்கு மாறாக மெட்டபாலிஸம் அளவு குறைகிறது.

நீங்கள் டயட் என்று உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை  உண்ணாமல் ஒதுக்குவதன் மூலம் உங்கள் உடலின் எதிர்ப்பு சக்தி பாதிப்படைகிறது.

குறைந்த கார்போ ஹைட்ரரோ டைட் செய்வதினால் உடலில் உள்ள தேவையான கொழுப்பு அமிலங்கள் உடைக்கப்படுவதால் உடல் குறையும் என்றாலும் அது வாந்தி, குமட்டல், வாய் துர்நாற்றம் மற்றும்  கல்லீரல், கிட்னி பிரச்சனைகளை உண்டாக்கும்.

குறைந்த நாட்களில் உடலை குறைக்க முற்படும்போது கொழுப்பு, சர்க்கரையளவு எல்லாம் குறைந்தாலும்  இதய நலனை பாதிப்படையச் செய்கிறது. ஒரு டயட் ஆரம்பிப்பதற்கு முன் உங்கள் இதய நலனை ஒரு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு கொள்ளவும்.

நீங்கள் அந்த நிகழ்வில் ஆரோக்கியமாக தெரியவே இந்த டயட்டை செய்தீர்கள் ஆனால் நீங்கள் எடுத்துக் கொண்ட டயட்டே உங்கள் சருமத்தின் பளபளப்பை குறைக்க கூடிய தலைமுடி உதிர்வு, நோய்வாய்ப் படுதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுத்தலாம்.

மருத்துவரை அணுகி உங்களுக்கேற்ற டயட்டை நடைமுறைப்படுத்தி உடல் எடையை படி படியாக குறைக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Important matter For diet peoples


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->