உங்க வீட்ல ஏ. சி இருக்கா? மழைக் காலத்தில் ஏ. சி. யை 'எப்படி' உபயோகிப்பது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.. !! - Seithipunal
Seithipunal



தற்போது பருவமழை தீவிரமடைந்து வருவதால், சுற்றுப்புறம் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இதனால் காற்றிலும், வீட்டிற்குள்ளும் ஒரு விதமான ஈரப்பதமான தன்மை இருக்கும். இந்நிலையில் மழைக் காலத்தில் ஏ. சி. யை பயன்படுத்தலாமா என்றும், எந்த டெம்பரேச்சரில் பயன்படுத்தலாம் என்றும் இந்த பதிவில் காண்போம். 

மழைக் காலத்தில் ஏ. சி. யை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. மேலும் வீட்டினுள் இருக்கும் ஈரப்பதத்தைக் குறைக்க ஏ. சி யை Cool Mode க்கு பதிலாக Dry Mode ல் வைத்து உயயோகப் படுத்தலாம். இதன் மூலம் காற்றில் உள்ள ஈரப்பதம் குறைந்து அறையினுள் சீரான வெப்பநிலையை பராமரிக்கலாம். 

இது தவிர, மழை குறைவாகப் பெய்யும் போது மீண்டும் Cool Mode க்கு மாற்றிக் கொள்ளலாம். மழைக் காலத்தில் சுற்றுப்புறம் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் ஏ. சி யின் வெப்பநிலையை 24 முதல் 26 டிகிரி செல்ஸியஸ் வரை வைத்துப் பயன்படுத்தலாம். 

மேலும் ஏ. சி. யின் செயல் திறன் நன்றாக இருக்க வேண்டுமானால் ஏ. சி. யின் ஃபில்டரை அவ்வப்போது தொடர்ந்து சுத்தம் செய்து வர வேண்டும். இதனால் அறையில் காற்றும் சுத்தமாக இருக்கும். வழக்கமாக ஏ. சி. வைத்திருக்கும் அறையை முழுவதும் மூடி வைத்திருப்போம். ஆனால் அது தவறானது. ஏ. சி. இருக்கும் இடத்தில் கண்டிப்பாக காற்று சுழற்சியை பராமரிக்க வேண்டும். எனவே அவ்வப்போது ஜன்னலை சிறிது நேரம் திறந்து வைக்க வேண்டும். இதனால் புதிய காற்று உள்ளே வரும். 

முக்கியமாக ஏ. சி. யை நாள் முழுவதும் பயன்படுத்தக் கூடாது. தேவைக்கேற்ப மட்டும் ஏ. சி.யைப் பயன்படுத்தினால் உங்களுக்கு மின்சார செலவும் குறைவாக இருக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Rainly Season At What Temperature We Can Use AC At Our Home


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->