கஸ்தூரி மஞ்சளை இப்படியும் சருமத்திற்கு பயன்படுத்தலாமா? - Seithipunal
Seithipunal


செயற்கை பொருட்களை கொண்டு பெரும்பாலும் அனைவரும் சருமத்தை பராமரிப்போம். அதனை தவிர்க்க இயற்கையாக கிடைக்க கூடிய கஸ்தூரி மஞ்சளை வைத்து சருமத்தை எப்படி பராமரிப்பது என தெரிந்து கொள்ளுவோம்.

 மஞ்சளுடன் பால், தயிர் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்துகழுவி வர சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அதே போல பன்னீர் கலந்து உபயோகித்து வர சருமம் மென்மையாகும்.

கஸ்தூரி மஞ்சள், எலுமிச்சை சாறு, முல்தாணிமட்டி, வேப்பிலை விழுது, துளசி விழுது, கடலைமாவு, பைத்தம்மாவு, கசக்கசா விழுது, பார்லி விழுது, தேன், பப்பாளி பழம், என அனைத்துடனும் சேர்த்து பயன்படுத்தலாம். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர முகம் பொலிவு பெறும்.

கஸ்தூரிமஞ்சளையும், பூலாங்கிழங்கையும் அரைத்து பூசி வர முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பளபளப்பாகும். அதே போல கஸ்தூரிமஞ்சள், பயித்தமாவு, தயிரை  ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி கழுவி வர முகம் பொலிஉ பெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kasthuri Manjal For Skin care


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->