ஒரே நாளில் 3 கோடி மக்கள்! மொத்தமாக 33 கோடி மக்கள் - புதிய சாதனை படைத்த மகா கும்பமேளா! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 33 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.

உலகத்திலேயே அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடிய பக்தி நிகழ்வு என்ற சாதனையை மகா கும்பமேளா படைத்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.

நேற்று வரையிலான தரவுகளின்படி, 33 கோடி பக்தர்கள் கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

ஜனவரி 31 ஆம் தேதிவரை 29.6 கோடி பக்தர்கள் வந்திருந்த நிலையில், நேற்று பிப்ரவரி முதல் நாளில் சுமார் 3 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maha Kumamela UP 2025


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->