பயனர் வீடுகளுக்கே சென்று ஸ்மார்ட்போன் சர்வீஸ் செய்யும் திட்டம் - லாவா அறிவிப்பு!
Lava announced new initiative called Service at Home
லாவா நிறுவனம் "சர்வீஸ் அட் ஹோம்" என்ற புது திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் லாவா நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களில் ஏற்படும் பிரச்சினைகளை வாடிக்கையாளர் வீடுகளுக்கே சென்று சரி செய்ய இருக்கிறது.
இத்திட்டம் நாடு முழுக்க சுமார் 9 ஆயிரம் அஞ்சல் குறியீட்டு பகுதிகளில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த திட்டம் லாவா இதன் பின் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு பொருந்தும். இதற்கு முன்னதாக லாவா பிளேஸ் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த திட்டம் போனிற்கான வாரண்டி இருக்கும் வரை அமலில் இருக்கும். இதில் பயன்பெற லாவா அதிகாரப்பூர்வ வலைதளம், கால் செண்டர், லாவா கேர் ஆப் மற்றும் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண் மற்றும் ஸ்மார்ட்போன் பெட்டியில் உள்ள கியுஆர் கோட் ஸ்கேன் செய்து தொடர்பு கொள்ளலாம்.
பயணர்களிடமிருந்து குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் கோரிக்கை ஏற்கப்பட்டு, 48 மணி நேரத்திற்குள் அதற்கான தீர்வு வழங்கப்படும். இதில் சிறிய மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் பிரச்சினைகள் பயனர் வீட்டிலேயே சரி செய்து தரப்படும்.
மேலும், பெரிய பிரச்சினைகளை சரி செய்ய ஸ்மார்ட்போன் எடுத்துச் செல்லப்பட்டு சரி செய்த பின் பயனர் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும். பிக்கப் மற்றும் டெலவரி இலவசமாக செய்யப்படுகிறது. இத்துடன் ஸ்கிரீன் மாற்றுவதும் இலவசமாக செய்து தரப்படுகிறது.
English Summary
Lava announced new initiative called Service at Home