மகளிர் பிரீமியர் லீக் தொடர் 2025; அட்டவணை வெளியீடு..!
Womens Premier League Series 2025 Schedule Released
5 அணிகள் பங்கேற்கும் 2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ. இன்று வெளியிட்டுள்ளது.
ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் 03வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கிறது. இதற்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் இதன்படி மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி பிப்., 14ஆம் தேதி தொடங்குகிறது
2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் பரோடா, பெங்களூரு, லக்னோ மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
இந்த தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 15ஆம் தேதி மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Womens Premier League Series 2025 Schedule Released