வெறும் வயிற்றில் பால் குடிப்பது நன்மையா? தீமையா?
milk drink take empty stomach in morning time good or bad
ஊட்டச்சத்து அதிகமுள்ள பாலை தினமும் காலையில் குடிப்பதால் புத்துணர்ச்சி உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. ஆனால், வெறும் வயிற்றில் பால் குடிப்பது நல்லதை விட தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அது என்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
* தினமும் காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பதால் உடலின் இன்சுலின் அளவு அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாமல், தெளிவான சருமத்திற்கு பயனளிக்காது.
* பால் குடிப்பதால் உணவை ஜீரணிக்க நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனால், வயிற்று வலி ஏற்படக்கூடும்.
* வெறும் வயிற்றில் பால் குடிப்பதால் இரைப்பை பிரச்சனைகள், அமிலத்தன்மை, வீக்கம், வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படும். ஆயுர்வேதத்தின் படி, பால் குடிக்க சிறந்த நேரம் மாலை ஆகும்.
* மாலை நேரத்தில் பால் குடிப்பது நீங்கள் ஓய்வெடுக்கும்போது, உங்கள் உடலைப் புத்துணர்ச்சியடையச் செய்ய உதவுகிறது. காலை வேளையில் பால் குடிப்பதால் உடல் எடை கூடும். தூக்கம் மற்றும் நரம்பு தளர்வு ஏற்படும்.
English Summary
milk drink take empty stomach in morning time good or bad