இன்னும் சில தினங்களில்.. விடைபெற காத்திருக்கும் 2021 திரும்பி பார்க்கலாம் வாங்க.!
Miss you 2021 part 1
இன்னும் சில தினங்களில் விடைபெறும் 2021..
2021ஆம் ஆண்டிற்கு விடைகொடுக்க தயாராகி கொண்டு வருகிறீர்களா?
கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு சவால்களை கடந்து வந்துள்ளோம். இது சாத்தியமா? என்ற கேள்விக்கு சாத்தியமே என பதிலளித்துள்ளது கடந்த இரண்டு வருடங்கள்..
காலை அலுவலகத்திற்கு சென்றால் மாலை வீடு திரும்பும் பணியாளர்களுக்கு, வீட்டில் இருந்துகூட வேலை செய்ய முடியும் என நிரூபித்துள்ளது.
பள்ளி, கல்லூரி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகளும் சாத்தியமே என்பதை நிரூபித்துள்ளது.
ஆன்லைன் தேர்வுகளும் சாத்தியமே என்பதை நடைமுறைப்படுத்தி காட்டியுள்ளது கடந்த இரண்டு வருடங்கள்..
ஸ்மார்ட்போன் இருந்தால் மட்டுமே படிக்க முடியும் என்பதை கண்மூடித்தனமாக நம்ப வைத்துள்ளது..
கடந்த இரண்டு வருடங்களில் மாஸ்க்கை மறக்காதவர்கள் இருக்க மாட்டார்கள்..
தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது போய், ழுவுவு-ல் படம் பார்க்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது..
கடந்த இரண்டு வருடங்களில் பெரும்பாலானோர் அதிகம் சென்ற இடம் என்றால் அது மருத்துவமனையாகத்தான் இருக்கும்..
மன தைரியத்துடன் இருங்கள். இன்னும் நாம் கடந்துவர வேண்டிய பாதைகள் எத்தனையோ உள்ளது. உங்களை ஆரோக்கியமாக பார்த்து கொள்ளுங்கள். நிச்சயம், அனைத்துவித சவால்களையும் தைரியத்துடன் கடந்து வந்துவிடலாம்.
இன்னும் சில தினங்களில் விடைபெற காத்திருக்கும் 2021.. கடந்து வந்த பாதை இதோ..
மீண்டும் பொதுமுடக்கம்..
ஜாவத் புயல்..
குலாப் புயல்..
2021-ல் சிறப்பாக நடந்த டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா..
ஒலிம்பிக்-ல் தங்கம் வென்ற தங்கமகன் நீரஜ் சோப்ரா..
கிரிப்டோகரன்சி மீதான மக்களின் ஆர்வம்..
திரையுலகம் சந்தித்த பெரும் இழப்புகள்..
மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது வென்ற சூப்பர் ஸ்டார்..
பெண்களுக்கான இலவச பேருந்து..
குறுகிய காலத்தில் பல லட்ச மக்களை கவர்ந்திழுந்த எஞ்சாமி பாடல்..
சென்னையை ஆட்கொண்ட வெள்ளம்..
பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி மாபெரும் வெற்றி பெற்ற ஜெய்பீம் திரைப்படம்..
உச்சத்தை தொட்ட தக்காளி விலை..
ரசிகர்களின் மனதை நொறுங்க செய்த சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து..
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த நடராஜன்..
ஓய்வு பெற்ற இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா..
பன்வாரிலால் புரோகித்தை அடுத்து தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவி..
புதிய வேளாண்மை சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்த பிரதமர் மோடி..
மீண்டும் டாடா வசம் வந்த 'ஏர் இந்தியா"..
ஹெலிகாப்டர் விபத்தில் இன்னுயிரை நீத்த இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத்... இன்னும் எத்தனையோ நிகழ்வுகள் உள்ளது.