உங்க பூச்செடி பூத்துக் குலுங்க வேண்டுமா.? இதை பன்னுங்க போதும்.!
natural fertilizers for your plants in the terrace garden
செடி வளர்க்கும் ஆர்வம் பெரும்பாலாக எல்லோரிடமும் இருக்கும். சிலருக்கு போதுமான அளவு இட வசதி இல்லாத காரணத்தினால் பூச்செடிகளை வளர்க்க முடியாமல் இருப்பார்கள் அதுபோன்று இருப்பவர்கள் தங்களது மொட்டை மாடியிலும் பூந்தொட்டிகளில் செடிகளை வளர்க்கலாம். இவ்வாறு செடிகளை வளர்க்கும் போது அவை நல்ல ஆரோக்கியமாகவும் செழித்து வளர நல்ல இயற்கையான உரங்களை இடவேண்டும். நம் வீட்டின் தோட்டம் மற்றும் மாடி தோட்டங்களில் இருக்கும் எந்தெந்த செடிகளுக்கு எவ்வாறான உரங்களை இடலாம் என பார்ப்போம்.
பெரும்பாலான வீட்டுத் தோட்டங்களில் செம்பருத்தி செடிகளை வளர்ப்பதை காணலாம். இவை பார்ப்பதற்கு அழகாக இருக்கும் மேலும் செம்பருத்திப் பூவில் ஏராளமான மருத்துவ குணங்களும் உள்ளன. இந்த செம்பருத்தி செடியானது நல்ல செழுமையாக வளர வேப்ப மரத்து இலைகளை நன்றாக காய வைத்து அவற்றை பொடி செய்து ஒரு பிடி அளவுக்கு வேர்ப்பகுதிகளில் போட்டு நன்கு கொத்தி விட வேண்டும். இவை அந்த செடிகளுக்கு நல்ல அடி உரமாகவும் பூச்சிக்கொல்லியாகவும் செயல்படும். ஒரு வயது வரை உள்ள செடிகளுக்கு ஒரு பிடி உரம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயமாக போட வேண்டும்.
நம் வீட்டு தோட்டத்தில் வளரும் மல்லிகை செடி அல்லது மாடியில் வளரும் மல்லிகைச் செடிக்கு வாரம் ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை கட்டாயமாக உரமிடவேண்டும். அதாவது புண்ணாக்கு கரைசல் நம் வீட்டில் பயன்படுத்தப்படும் காய்கறிகளின் கழிவுகள் மீன்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் முட்டை தோடு டீ தூள் மற்றும் வாழைப்பழத் தோல் போன்றவற்றை இவற்றிற்கு உரமாக பயன்படுத்தலாம். செடிகளைச் சுற்றி பள்ளம் தோண்டி அவற்றில் இந்த உரங்களை இட்டு நன்றாக அழுத்தி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் செடிகள் நன்கு செழுமையாக வளர்ந்து அதிகமான பூக்களை தரும்.
நம் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும் கனகாம்பரம் செடிகளுக்கு பூச்சிகள் தாக்காமல் இருக்க வேப்ப எண்ணையை மாதம் ஒருமுறை தெளிக்க வேண்டும். மேலும் பஞ்சகவியம் 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேர் பகுதிகளில் ஊற்றி வர வேண்டும். இவ்வாறு செய்து வரும் போது செடிகள் நன்கு செழுமையாக வளர்வதுடன் பூச்சிகளின் தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கப்படும்.
English Summary
natural fertilizers for your plants in the terrace garden