சர்க்கரை நோயாளிகளுக்கு காலையில் சத்தான, சுவையான சூப்பர் ரெசிபி.!
Onion wheat dosa preparation in Tamil
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - இரண்டு கப்
பச்சை மிளகாய் - ஐந்து
வெங்காயம் - 3
கொத்தமல்லி ,கருவேப்பிலை - சிறிதளவு
சீரகம் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
வெந்தயம்
உளுத்தம் பருப்பு
கடுகு
செய்யும் முறை :
பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவினை போட்டு உப்பு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயைஅடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கிய பின் அதை கரைத்து வைத்த மாவில் சேர்த்து அதனுடன் கொத்தமல்லி, கருவேப்பிலை, உப்பு, சீரகம் சேர்த்து நன்றாக பிசைந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், தேவையான அளவு எண்ணெய் அல்லது தேவைக்கேற்ப நெய் ஊற்றிக் கொள்ளலாம். ஒரு கரண்டி மாவு எடுத்து கல்லில் தோசையாக வார்த்து பரிமாறவும்.
இப்போது அருமையான கோதுமை வெங்காய தோசை ரெடி.!
இந்த தோசைக்கு சட்னி இல்லாமல் கூட சாப்பிடலாம், அருமையாக இருக்கும்.
English Summary
Onion wheat dosa preparation in Tamil