கால் பாதங்களில் 'பித்த வெடிப்பா..?' இருக்கவே இருக்கு 'எளிமையான' வீட்டு வைத்தியம்..!! - Seithipunal
Seithipunal



நமது உடல் எடை முழுவதையும் சுமந்து கொண்டிருப்பதே நமது பாதங்கள் தான். தரையில் உள்ள பல்வேறு கிருமிகளும் கால் பாதங்கள் வழியாகத் தான் நமது உடலில் ஊடுருவுகின்றன. எனவே நமது முகத்தைப் பராமரிப்பது போல் பாதங்களையும் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. 

கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புக்கான வீட்டு வைத்தியங்களை இங்கு பார்ப்போம். 

வெதுவெதுப்பான நீர்: 

அதிக நேரம் தண்ணீரில் காலை வைத்திருந்தால் காலில் உள்ள இயற்கையான எண்ணெய்ப் பசை மறைந்து சீக்கிரம் வறண்டு விடும். அதே போல் சூடான நீரில் குளிக்காமல் வெது வெதுப்பான நீரில் குளிப்பதே கால் அழகுக்கு நல்லது. 

மருதாணி :

மருதாணி போடுவது என்பது அழகுக்காக மட்டுமல்ல. கை, கால் நகங்களின் ஆரோக்கியத்திற்காகவும் தான். உங்களுக்கு பாதத்தில் வெடிப்பு இருந்தால் மருதாணி இலையுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து நன்றாக அரைத்து பற்று போட்டு வர விரைவில் வெடிப்பு சரியாகும்.

கற்றாழை மற்றும் உருளைக் கிழங்கு :

கற்றாழையின் சதைப் பகுதியை ஒரு நாளைக்கு 2 முறை வெடிப்பில் தடவினால், சில நாட்களிலேயே  சரியாகும். மேலும் உருளைக் கிழங்கின் சாற்றினை பூசினாலும் வெடிப்பு நீங்கி பாதங்கள் அழகாகும். 

எலுமிச்சை, தயிர் மற்றும் கல் உப்பு, சோடா உப்பு :

எலுமிச்சைப் பழத்தின் தோலைக் கொண்டு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாதங்களை நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். மேலும் தயிரை காலில் தடவி மென்மையான ப்ரஷ்ஷினால் தேய்க்கலாம். இதற்கடுத்த நாள் மறக்காமல் கல் உப்பு அல்லது சோடா உப்பை வெடிப்பின் மீது தேய்த்து கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு மூன்று நாட்கள் செய்ய வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Simple Home Remedies For A Cracked Heels


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->