மாம்பழம் வாங்க போறீங்களா? அப்போ இது உங்களுக்கு தான்... மாம்பழ வகைகள் ஓர் பார்வை! - Seithipunal
Seithipunal


முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய சீசன் படமாகும். இந்த பழத்தை ருசிப்பதற்காகவே கோடையை எதிர்பார்த்து இருப்பவர்களும் உண்டு. தித்திக்கும் சுவையும் தெவிட்டாத வாசமும் உள்ள மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன  அவை என்ன என்று பார்ப்போம்.

தோதாபுரி/ கிளி மூக்கு மாம்பழம்:

இந்த வகை மாம்பழங்கள் கர்நாடகா ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் அதிகமாக விளையும் மாம்பழங்கள் ஆகும். இவற்றின் அடிப்பகுதியை பார்ப்பதற்கு கிளியின் மூக்கு போல் இருப்பதால் இந்தப் பெயர் பெற்றது. இவற்றின் சுவையானது இனிப்பு மற்றும் புளிப்பு கலந்திருக்கும். இவை பழுத்தாலும் பச்சை நிறமாகவே இருக்கக்கூடிய பழமாகும். இதன் காரணமாக அதிகமாக  ஊறுகாய் தயாரிக்க பயன்படும்  
 மாம்பழம் இது.

கேசர் :

இந்த வகை மாம்பழங்கள் சௌராஷ்டிரா மற்றும்  குஜராத்தின் கட்ச் பகுதிகளில் அதிகமாக விளைகின்றன. இவற்றை நாம் வீட்டில் வைத்திருக்கும் போது நமது வீட்டின் குளிர்சாதன பெட்டி மற்றும் இந்த மாம்பழங்கள் இருக்கும் இடங்கள் யாவும் இந்த மாம்பழத்தின் வாசத்தால் கமகமக்கும். தித்திப்பான சுவையுடைய இந்த மாம்பழம் பச்சை நிறத்தில் இருந்தாலும் இதன் தோள் பகுதியில்  குங்குமப்பூ அல்லது கேசரி நிறம் இருக்கும். இந்த வகை பழங்கள் மாம்பழங்களின் ராணி என அழைக்கப்படுகிறது.

சஃபேடா/பங்கனபள்ளி:

இந்த மாம்பழங்கள் ஆந்திர மாநிலத்தின் கற்றோர் மாவட்டத்தில் உள்ள பங்கனபள்ளி  என்ற இடத்தில் அதிகமாக விளைகின்றன. சந்தைக்கு முதன் முதலில் வந்து சேருகின்ற மாம்பழங்களும் இவைதான். இந்த மாம்பழங்கள் மாசற்ற மஞ்சள் நிறத்தில் இருக்கும் . இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடைய  இந்த  மாம்பழங்கள் ஓவல் வடிவத்தில் இருக்கும்.

அல்போன்சா/ஹபுஸ்:

இந்த வகை மாம்பழங்கள் மகாராஷ்டிராவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் குஜராத் கர்நாடகா மற்றும் மத்திய பிரதேச பகுதிகளில்  அதிகமாக விளைவிக்கப்படுகின்றன. தித்திக்கும் இனிப்பு சுவையிலிருக்கும் இந்த மாம்பழங்கள்  உலகம் முழுவதும்  இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. கோல வடிவத்தில் இருக்கும் இந்த மாம்பழம்  சிவப்பு நிறத்துடன் மஞ்சள் நிற தோளுடன் இருக்கும். இந்தியாவிலேயே மிகவும் விலை உயர்ந்த மாம்பழ வகைகளில்  ஒன்றாகும்.

நீலம்:

இந்த வகை மாம்பழங்கள் இந்தியாவின் ஹைதராபாத் பகுதிகளில் அதிகமாக விளைந்தாலும் இந்தியா முழுவதும் கிடைக்கின்றன. இந்த மாம்பழங்கள் மற்றும் மாம்பழங்களை விட அளவில் சிறியதாகும். சுவை மிகவும் அருமையாக இருக்கும். மாம்பழ வகைகளிலேயே அதிக இனிப்பு வகையை கொண்டது இந்த நீலம் மாம்பழம் தான். ஜூன் மாதங்களில் சந்தைக்கு வரும் இந்த  மாம்பழங்களின் நறுமணம் மற்றும் சுவை  நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் என்றால் மிகை ஆகாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Types of mangoes in market review


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->