கோடை வெயிலில் நமது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க சில டிப்ஸ்!
Ways to keep our body hydrated in the summer heat
கோடை காலத்தில் எப்போதும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இதனால் நமது உடலில் அதிகப்படியான நீர் இழப்பு ஏற்படும் . இதனை சரி செய்வதற்கு அதிகமான அளவு நீர் குடிக்க வேண்டும். மேலும் நமது உடலானது எப்போதும் நீரேற்றத்துடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நீரின் அளவு உடலில் குறையும் போது வாந்தி, மயக்கம், தசைப்பிடிப்பு, தலைவலி போன்ற உடல் உபாதைகளும் ஏற்படக்கூடும். இதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.
கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிப்பதற்கு அதிகப்படியான அளவு தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொருவரது உடலமைப்பை பொருத்தும், தண்ணீருக்கான தேவை மாறுபடும். அதனால் நமக்கு தாகம் ஏற்படும் போதெல்லாம் அதிகமான அளவு தண்ணீரை குடித்து நமது உடல் நீரேற்றத்துடன் இருக்குமாறு வைத்துக் கொள்வது சிறந்ததாகும்.
உலர்ந்த சருமம், மயக்கம், தலைவலி, மூச்சிரைப்பு, அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும் உணர்வு. அடர் பழுப்பு நிறமாக சிறுநீர் வெளியேறுதல் ஆகியவை நமது உடலுக்கு அதிகப்படியான நீர் தேவை என்பதை காட்டும் அறிகுறிகள் ஆகும். அதனால் இந்த அறிகுறிகளை கவனித்து நமது தேவைக்கு ஏற்றார் போல் அதிகமான அளவு தண்ணீர் குடித்துக் கொள்ள வேண்டும். இதன் காரணமாக உடலானது நீரேற்றத்துடன் இருக்கும்.
தண்ணீரை மட்டுமே எடுத்துக் கொள்ளாமல் நமது உணவு முறையில் நீர் ஆதாரங்களை சேர்ப்பதன் மூலமும் நமது உடலை நீரேற்றுடன் வைத்துக் கொள்ள முடியும். டீ காபி பழச்சாறுகள் சூப் போன்றவற்றை நமது உணவு முறையில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கோடைகாலத்தில் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
தண்ணீர் சத்து அதிகம் உள்ள பழங்களை சாப்பிடுவதன் மூலமும் நமது உடலை நீரேற்றுடன் வைத்துக் கொள்ள உதவும். ஆரஞ்ச், தர்பூசணி, வெள்ளரிக்காய், தக்காளி போன்றவற்றை நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் நமது உடலுக்கு தேவையான நீர் சத்து கிடைக்கிறது.
எப்போதெல்லாம் நமது உடலில் இருந்து அதிகமான வியர்வை வெளியேறுகிறதோ அப்போதெல்லாம் அதிகமான அளவு தண்ணீர் குடித்து அந்த நீரிழப்பை சரி செய்ய வேண்டும். இதன் மூலம் நமது உடல் நீரேற்றுத்துடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம்.
English Summary
Ways to keep our body hydrated in the summer heat