நைட் ஷிஃப்ட் வேலையில் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன..?! - Seithipunal
Seithipunal



இன்றைய மாறிவரும் கால சூழ்நிலையில், இரவு நேர பணி எனது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. பொதுவாக இயற்கை இருள் கவிழ்ந்த நேரங்களில் தூக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இரவு நேர பணி செய்யும்போது உடல் இயக்கம் முழுவதும் இயற்கை விதிக்கு எதிராக இருக்கிறது. 

இரவில் தூங்காமல் வேலை செய்யும்போது மாரடைப்பு, மலச்சிக்கல், மார்பக புற்றுநோய், உடல்பருமன், நீரிழிவு, ரத்த அழுத்தம், நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. ஆனால் உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேண முடியும். 

எனவே இரவு நேரத்தில் பணிபுரிபவர்கள், சிக்கன், டோஃபு, பருப்பு போன்ற அதிக புரத உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும். 

மேலும் நார்ச்சத்து அதிகமுள்ள பீன்ஸ், ஆப்பிள், ப்ராக்கோலி, முருங்கைக்கீரை, தானியங்கள், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், ட்ரை ஃபுரூட்ஸ் போன்ற உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்ளலாம். 

பொதுவாக இரவு வேலை செய்பவர்கள் தூக்கம் வராமல் இருக்க அதிகமாக காபி மற்றும் டீ குடிப்பார்கள். ஆனால் இவை இரண்டும் தலைவலி, தலைச்சுற்றல், நீரிழப்பு, செரிமான பிரச்சினை மற்றும் மனநலக் கோளாறுகளை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக தண்ணீர் அல்லது பழச்சாறு அருந்தலாம்.

இல்லாவிட்டால் 1 அல்லது 2 கப் டீ அல்லது காபி குடிப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம். மேலும் வேலை முடிவதற்கு 4 - 5 மணி நேரங்களுக்கு முன்பாகவே இந்த பானங்களை குடித்து முடித்து விடவேண்டும். அப்போது தான் நல்ல தூக்கம் கிடைக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What to Eat And Avoid For Peoples Working in Night Shift


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->