சுடு தண்ணீர் சுவையற்றதாக இருப்பதற்கு காரணம் என்ன?! - Seithipunal
Seithipunal


சுடு தண்ணீர் சுவையற்றதாக இருப்பதற்கு காரணம் என்ன?

காய்ச்சல் வந்தா சுடு தண்ணி குடி. இருமல் வந்தா சுடு தண்ணியை குடி, தொண்டை வலி வந்தால் சுடு தண்ணிய குடி என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் யாருக்கும் சுடு தண்ணியை குடிக்க பிடிக்காது. காரணம் சுவை இல்லாமல் இருக்கும். 

இயற்கையாகக் கிடைக்கும் நீரில் பலவகை உப்புகளும், வாயுக்களும் சத்துக்களாக கரைந்துள்ளன. வாயுக்களைப் பொறுத்தவரை ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுக்கள் அதிகம் கரைந்துள்ளன.

நீரை நாம் கொதிக்க வைக்கும்போது அதில் கரைந்துள்ள வாயுக்கள் வெளியேறி விடுகின்றன. மேலும் அதிலுள்ள கார்பனேட் மற்றும் ஹைட்ராக்சைடு உப்புகள், நீரைக் கொதிக்க வைக்கும் பாத்திரத்தின் உட்புறத்தில் உப்புகளாகப் படிந்து விடுகின்றன. எனவே கொதிக்க வைத்த நீரின் சுவை நீங்கி விடுகிறது. இதன் காரணமாகவே சுடு தண்ணி சுவை இல்லாமல் இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why hot water did not tasteless


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->