உலகின் மிக மிக முக்கியமான நபர் நீங்கள் என்று உணர்ந்திருக்கிறீர்களா?
World important person for you
உங்களிடம் யாராவது வந்து உலகிலேயே முக்கியமான நபர் யார் என்று கேட்டால்... என்ன பதில் சொல்வீர்கள்? அமெரிக்க ஜனாதிபதி என்றா? இந்தியப் பிரதமர் என்றா ? பில்கேட்ஸ் என்றா? அனில் அம்பானி என்றா? உலகிலேயே முக்கியமான நபர் ஒருவர் இருக்கிறார் என்றால், சந்தேகமே இல்லாமல் அது நீங்கள் தான்.
ஒவ்வொருவருக்கும், அவரவர் பிறப்பு என்பது மிக மிக முக்கியம், மனிதராகப் பிறந்ததால் தான் நல்லது, கெட்டது, சந்தோஷம், சோகம் என்று அனைத்து உணர்வுகளையும் அனுபவிக்க முடிகிறது. வாழ்க்கையில் ஒருவருக்குக் கிடைக்கும் உட்சபட்ச வாய்ப்பு உயிர்வாழ்தல் தான், அதனால் உலகின் மிக முக்கியமான நபர் யாரென்று கேட்டால் எவ்விதத் தயக்கமுமின்றி அது நீங்கள்தான் என்று கூறுங்கள்.
இதை நீங்கள் உணர்ந்தால் தான் உலகில் சாதனைகளைப் புரிய முடியும். நான் எதற்கும் இயலாதவன், என்னுடைய பிறப்பே வேஸ்ட்டானது என்று எல்லாம் நினைக்க ஆரம்பித்தால்... வாழ்க்கையில் மிக மிக அரிய சந்தர்ப்பத்தை நீங்கள் வீணாக்கி கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களை நீங்களே வெறுத்தால், உங்கள் வாழ்க்கையை நீங்களே வெறுத்தால், உங்களுக்கே நீங்கள் முக்கியமான நபர் இல்லையென்றால், எப்படி மற்றவர்களால் உங்களை முக்கியமானவராக ஏற்றுக்கொள்ள முடியும்? உணருங்கள் இந்த உலகில் உங்களுக்கு மிக மிக முக்கியமான ஒரு நபர் இருக்கிறார் என்றால், அது நீங்கள் தான்.
English Summary
World important person for you