ஆந்திராவில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 08 பேர் பலி; விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள சந்திரபாபு நாயுடு; நிதியுதவி அறிவித்துள்ள பிரதமர் மோடி..!
08 people died in a firecracker factory explosion in Andhra Pradesh Chandrababu Naidu has ordered an inquiry Prime Minister Modi has announced financial assistance
ஆந்திர பிரதேசத்தில் அனகாபள்ளி மாவட்டத்தில் கொடாவுரட்லா பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று இந்த பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் ஏற்பட்டுள்ளது. இதில் பெண் உட்பட08 பேர் பலியானதோடு, மேலும் 07 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரான ஜெகன் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. மற்றும் உள்துறை அமைச்சர் அனிதா ஆகியோரிடம் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்த சம்பவம் பற்றி விரிவான விசாரணை மேற்கொள்ளும்படி, உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், முன்னாள் முதலமைச்சர் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டியும் வருத்தம் தெரிவித்துள்ளார். அத்துடன், மாநில அரசு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு முழு அளவில் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.02 லட்சம் நிதியுதவி வழங்கிட பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

'ஆந்திராவின் அனகாப்பள்ளி மாவட்டத்தில் நடந்த தொழிற்சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.02 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
08 people died in a firecracker factory explosion in Andhra Pradesh Chandrababu Naidu has ordered an inquiry Prime Minister Modi has announced financial assistance