முதல்வரின் துபாய் பயணத்தை விமர்சித்த அண்ணாமலைக்கு..ரூ.100 கோடி நஷ்ட ஈடு.! - Seithipunal
Seithipunal


முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து அவதூறு பேசியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு மற்றும் ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு அரங்கு மூலம் சர்வதேச அளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் புதிய முதலீடுகளை உருவாக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அரங்கை தொடங்கி வைப்பதற்காக அரசு முறை பயணமாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து துபாய் சென்றார்.

தமிழக முதல்வரின் இந்த பயணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்பியதாகவும் அதற்காக அவர் முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக சார்பில் இன்று அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அனுப்பியுள்ள நோட்டீஸில்,

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் அவர்கள் தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் துபாய் எக்ஸ்போ 2022ல் கலந்து கொண்டதை கொச்சைப்படுத்தியும், உள்நோக்கம் கற்பிற்கும் வகையிலும் விருதுநகர் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் உங்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பேசியுள்ளீர்கள்.

முதல்வரின் துபாய் பயணம் வெளிப்படையானது மற்றும் அதன் நோக்கம் தமிழகத்திற்கு அதிக முதலீடு வாய்ப்புகளை ஈர்ப்பது முதல்வரின் அலுவல் சார்ந்த பயணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அடிப்படை ஆதாரமின்றி நீங்கள் பேசியிருப்பது திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக இருக்கிறது.

இதற்காக நீங்கள் பொது வெளியில் பகிரங்கமாக தமிழக முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல் நஷ்ட ஈடாக ரூ. 100 கோடி தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

100 crore compensation for Annamalai criticized the Chief Minister's visit to Dubai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->