#BigBreaking || இவர்கள் இனி கட்சியின் பெயரை பயன்படுத்த கூடாது.! சற்றுமுன் அதிரடியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.!
16 MLAs Issue
மகாராஷ்டிரா மாநில ஆளும் சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள், ஏகநாத் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர்.
இதன் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்த நேரத்திலும் சிவசேனாவின் தலைமையிலான ஆட்சி கவிழும் சூழல் நிலவிவருகிறது.
மேலும், சிவசேனா கட்சியின் தொண்டர்கள் தெருக்களில் இறங்கி போராட தயாராகி வருவதாகவும், இதேபோல் உத்தவ் தாக்கரேவின் ஆதரவாளர்களும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அசாம் மாநிலத்தில் தங்கியுள்ள ஏக்நாத் ஷிண்டே மற்றும் 16 எம்எல்ஏக்களுக்கு, தற்போது துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நோட்டீஸ்-க்கு 16 எம்எல்ஏக்களும் தங்கள் தரப்பில் இருந்து வருகின்ற 27ம் தேதிக்குள் எழுத்து பூர்வமாக விளக்கம் தர வேண்டும். அப்படி தரவில்லை என்றால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அதிருப்தி எம்எல்ஏ.,க்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு தற்போது வாபஸ் பெற்றிருப்பதால், மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தானே, மும்பை நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சற்றுமுன் இந்தப் பதினாறு எம்எல்ஏக்களும் சிவசேனா கட்சியின் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று, சிவசேனாவின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.