2 லட்சம் பெண்கள் பங்கேற்கும் மது-ஒழிப்பு மாநாடு!.....விசிக தலைமையில் இன்று நடைபெறுகிறது!
2 lakh women will participate in alcohol abstinence conference vck is leading today
சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கள்ளக்குறிச்சிமாவட்டம், உளுந்தூர் பேட்டையில், வரும் அக்டோபர் 2-ம் தேதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மது-போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இந்த மாநாட்டில் மதவாத - சாதியவாத சக்திகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளதாக கூறிய அவர், குறிப்பாக அதிமுக மற்றும் தவெக கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும், தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது.
சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி, இந்த மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
மேலும் இந்த மாநாட்டில், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், அய்யா வைகுண்டர் இயக்கத்தின் தலைவர் பால.பிரஜாபதி அடிகளார் உள்ளிட்ட பலர் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி கூறுகையில், மாநாட்டில் மது மற்றும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட நோக்கம் குறித்து எடுத்துரைக்கப்படுவதாகவும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சீருடையுடன் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
English Summary
2 lakh women will participate in alcohol abstinence conference vck is leading today