₹.2000 கோடி கொடுத்து கட்சியை கைப்பற்றிய ஏக்நாத் ஷிண்டே.! பரபரப்பு குற்றச்சாட்டு.!
2000 crore scam behind shiv sena name and symbol issue sanjay ravat accusation of ruling party
சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பெறுவதற்கு 2000 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை நடந்துள்ளதாக அக்கட்சியின் மூத்த உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.
மராட்டிய மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சி மற்றும் சிவசேனா ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்த நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம் எல் ஏக்களை கட்சிக்கு எதிராக திருப்பி பாஜகவுடன் இணைந்து மகராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார்.
மேலும், சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருந்தார். கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் அதனால் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தனக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்திருந்தார் உத்தவ் தாக்ரே.
இந்நிலையில் இருதரப்பு கருத்துக்களையும் கேட்ட தேர்தல் ஆணையம் கட்சி விதிகளை பரிசீலனை செய்து மகாராஷ்டிரா முதல் மந்திரி இயக்குனர் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சியின் சின்னம் மற்றும் பெயரை பயன்படுத்துவதற்கு அதிகாரம் வழங்கியது. இதற்கு எதிராக உத்தவ் தாக்ரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்த சூழ்நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த உறுப்பினரும் பாராளுமன்ற எம்.பி, சஞ்சய் ராவத் சிவசேனா கட்சியின் சின்னம் மற்றும் பெயர் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் தரப்புக்கு வழங்கப்பட்டிருப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னம் பெறுவதற்கு இதுவரை 2000 கோடி ரூபாய் அளவிலான ஒப்பந்தங்கள் மற்றும் பண பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது. இது முதற்கட்ட தகவல் மட்டுமே. ஆனாலும் இதே 100 சதவீத உண்மையான தகவல் என்று கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக பல உண்மைகள் விரைவிலேயே வெளிவர இருக்கின்றன என்றும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார் சஞ்சய் ராவத்.
English Summary
2000 crore scam behind shiv sena name and symbol issue sanjay ravat accusation of ruling party