2026 சட்டமன்ற தேர்தல் எதிரொலி!...திமுக "சட்டமன்றத் தொகுதிப் பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்” அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


திமுக "சட்டமன்றத் தொகுதிப் பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்”வருகிற 28-ம் தேதி சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் தலைமையில், 2026-சட்டமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நியமனம் செய்யப்பட்டுள்ள “சட்டமன்றத் தொகுதிப் பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்”
வருகிற 28.10.2024 (திங்கட்கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெறும்,

இக்கூட்டத்தில் தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, திமுகவில் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை திமுக கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அமைத்து அதன் மூலமும் பல்வேறு ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2026 assembly election echoes dmk constituency audience consultative meeting announcement


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->