அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!!
23 resolutions passed in AIADMK general meeting
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த பொதுக்குழு கூட்டம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதா படத்திற்கு மழை தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிச்சாமியை பொதுக்குழு நடத்த வருமாறு அவை தலைவர் தமிழ்மகன் உசேன் அழைப்பு விடுத்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதை முன்மொழிய பொதுக்குழு தொடங்கியது.
அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்று நடைபெறும் பொதுக்குழுவில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அமர செய்வோம், வெற்றி தொட்டுவிடும் தூரத்தில் தான் உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி பொதுக்குழு கூட்டத்தில் பேசியுள்ளார்.
English Summary
23 resolutions passed in AIADMK general meeting