நீலகிரி || மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. மூவர் போக்சோவில் கைது..! - Seithipunal
Seithipunal


மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், நெடிமந்து பழங்குடி கிராமம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சீமாராஜ்குட்டன், பொனிஸ்குட்டன், முத்துராஜ் ஆகியோர் நேற்று ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அதன்பின், மதுபோதையில் அந்த பகுதியில் சுற்றி திரிந்து வந்துள்ளனர். அப்போது, குன்னூர் அருகே உள்ள சேலாஸ் பகுதியை சேர்ந்த தாய் தந்தையை மனநலம் பாதிக்கப்பட சிறுமியை தேயிலை தோட்டத்திற்கு அழைத்து சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அந்த வழியே சென்ற மக்கள் அவர்களை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று காப்பகத்தில் ஒப்படைத்தனர். மூவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 arrested in POCSO Who sexually abused a Girl


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->