கருணாநிதியின் 3 அடி வெண்கல சிலை - இன்று திறந்து வைக்கிறார் உதயநிதி ஸ்டாலின்!
3 feet bronze statue of karunanidhi udhayanidhi stalin to inaugurate today
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 3 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைக்கிறார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நாளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக இன்று மதியம் சென்னையில் இருந்து உதயநிதி ஸ்டாலின் காரில் புறப்படுகிறார்.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு விழுப்புரம் மாவட்ட எல்லை ஓங்கூர் மற்றும் திண்டிவனம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொன்முடி, தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.
பின்னர் திருவெண்ணெய்நல்லூர் செல்லும் உதயநிதி ஸ்டாலின், அங்கு மரகதம் கந்தசாமி மண்டபத்தின் முன்பு புதியதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 3 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்து பேச உள்ளார். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் உதயநிதி ஸ்டாலின், பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்க உள்ளார்.
English Summary
3 feet bronze statue of karunanidhi udhayanidhi stalin to inaugurate today