தமிழகத்தில் 4 புதிய மாநகராட்சிகள்.. சட்டசபையில் மசோதா தாக்கல்..!! - Seithipunal
Seithipunal


இன்று சட்டசபையில் புதிதாக 4 மாநகராட்சிகளை உருவாக்குவதற்கான மசோதா தாக்கல் செய்யப் பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தமிழகத்தின் நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் தொகையின் சதவீதம் 48.45 ஆகும். 

இது மொத்த மக்கள் தொகையில் 53 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் கடந்த 3 ஆண்டுகளில் 28 புதிய நகராட்சிகள் உருவாக்கப் பட்டன. மேலும் கடலூர், தாம்பரம் ,  காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், சிவகாசி உள்ளிட்ட 6 மாநகராட்சிகளும் உருவாக்கப் பட்டன. 

இந்நிலையில் கடந்த ஆண்டு சட்டப் பேரவையில் தொழில் நகரமான நாமக்கல், கோவில் நாகரமான திருவண்ணாமலை, கல்வி நகரமான காரைக்குடி மேலும் வரலாற்றுத் தலைநகராக விளங்கிய புதுக்கோட்டை ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த அறிவிப்பு வெளியிடப் பட்டது.

இந்நிலையில் அந்நகரங்களின் மக்கள் தொகையும், வருமான அளவுகோலும் அவற்றை மாநகராட்சியாக தரம் உயர்த்த தடையாக உள்ளன. எனவே இந்த வரையறைகளை தளர்த்தி மேற்கண்ட நான்கு நகராட்சிகளையும், மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்டசபையில் இன்று மசோதா தாக்கல் செய்யப் பட்டுள்ளது. 

அதன்படி மேற் குறிப்பிட்ட நகராட்சிகளோடு அந்நகராட்சிகளின் அருகில் உள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் ஒன்றிணைத்து மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப் படும். இதையடுத்து இந்த மசோதாவின் மீது நாளை சட்ட சபையில் குரல் வாக்கெடுப்பு நடத்தப் பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 Municipal Corporations to be Emerged in Tamilnadu Bill tabled in Todays Assembly


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->