தமிழ்நாட்டில் 46,931 பேருக்கு வேலை ரெடி!...அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி அறிவிப்பு!
46931 jobs are ready in tamil nadu minister thangam thennarasu government action announcement
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், துறை ரீதியான அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும், புதிய திட்டங்கள், கொள்கைகள் குறித்தும், வளர்ச்சித் திட்டங்களை விரைவில் செயல்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் மின்னணு, மென்பொருள், பாதுகாப்பு உபகரணம், பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா உள்ளிட்ட துறைகளில் ரூ.38,600 கோடி மதிப்பீட்டில் 14 புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 46,931 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக 7 முறை தொழிலாளர் நலத்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், 3 அமைச்சர்களும் சேர்ந்து 10 மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்த அவர், தொழிற்சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தவிர அனைத்தையும் சாம்சங் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறினார்.
மேலும் சாம்சங் தொழிலாளர்கள் தயவு செய்து பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், தொழிலாளர்கள், முதலமைச்சர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும், அவர் எப்போதும் உங்கள் பக்கம்தான் நிற்பதாக தெரிவித்தார்.
English Summary
46931 jobs are ready in tamil nadu minister thangam thennarasu government action announcement