2022-2023 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்..2023ஆம் ஆண்டுக்குள் 5G வசதி.!
5G upgraded in budget
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால், இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
முதல்கட்ட கூட்டத்தொடர் இன்று தொடங்கி பிப்ரவரி 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அடுத்த கட்ட கூட்டத்தொடர் மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாள் பாராளுமன்ற இரு சபைகளில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
இந்நிலையில், இன்று 2022-2023 ஆம் நிதியாண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். 2வது முறையாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தொலைதொடர்புத்துறையை மேம்படுத்த 5ஜி அலைகற்றை ஏலம் 2022ல் மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், 2023ஆம் ஆண்டுக்குள் தனியார் மூலம் 5ஜி வசதி துவங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.