சற்றுமுன் | 5ஜி ஏலத்தில் ரூ.5 லட்சம் கோடி மோசடி., ஆ ராசா பரபரப்பு பேட்டி.!
a rasa say 5h scam
5g அலைக்கற்றை ஏலத்தை மத்திய அரசு முறையாக நடத்தவில்லை என்று, திமுக எம்பி ராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆ ராசா தெரிவித்தாவது, "குறைந்தபட்சம் மெகா ஹெர்ட்ஸ்-க்கும் ஜிகா ஹெர்ட்ஸ்-க்கும் 10, 20 மடங்கு அதிகமாக இருக்கும்.
அதன் காரணமாகத்தான் அதனை மெகா ஹெர்ட்ஸ், ஜிகா ஹெர்ட்ஸ். 2ஜி அலைக்கற்றை என்பது வெறும் வாய்ஸ் மட்டும் தான் செல்லும். 3ஜி அலைக்கற்றையில் புகைப்படங்கள், வீடியோக்கள் செல்லம். 4ஜி அதைவிட வலிமை அதிகம். 5 ஜி இன்னும் அதிக வலிமை கொண்டது.
உங்கள் மொபைல் போனில் 3ஜி பயன்பாட்டின் போது 10 நொடிகளில் உங்களுக்கான விடை கிடைத்துவிடும். 4ஜி 5 வினாடிகளில் வந்து விடும். 5g ஒரு நொடியில் உங்களுக்கான விடை கிடைத்து விடும். அந்த அளவுக்கு வலிமையானது. அப்படி பார்த்தால் இது ஐந்து, ஆறு லட்சம் கோடி ரூபாய்க்கு செல்ல வேண்டியது.
5ஜி அலைக்கற்றை ஏலம் விடுவதற்கான திட்டமிடுதலில் மோசடி நடந்து உள்ளதா? அல்லது இவர்களுக்குள் 4, 5 கம்பெனிகளுடன் சேர்ந்து மத்திய அரசாங்கம் கூட்டு சதி செய்து விட்டதா? என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும்.
5 லட்சம் கோடி, 5 லட்சம் கோடி என்று நான் சொல்லவில்லை. அரசாங்கம் தான் அதை திட்டமிட்டுள்ளது. ஆனால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மட்டுமே சென்றுள்ளது.
எங்கோ தவறு நடந்துள்ளது. அன்றைக்கு 2 ஜி அலைக்கற்றை ஏலத்தால் ஆட்சியே மாற்ற வேண்டும் என்று சதி செய்தார்கள்" என்று ஆ ரஸா தெரிவித்தார்.