டெல்லி அரசியலில் பரபரப்பு!...தேர்தல் இன்னும் அறிவிக்காத நிலையில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி! - Seithipunal
Seithipunal


டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து 6 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து விடுதலையானார்.

தொடர்ந்து  முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், டெல்லியில் புதிய முதலமைச்சராக அதிஷியை, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் ஒரு மனதாக தேர்வு செய்தனர். இதையடுத்து டெல்லி புதிய முதலமைச்சராக அதிஷி தற்போது பதவி வகித்து வருகிறார்.

மேலும், டெல்லியில் உள்ள மொத்தம் 70 சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு,  தேர்தல் அறிவிப்பு ஜனவரியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 11 வேட்பாளர்களை கொண்ட முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்த 6 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டத்திற்குப் பின்னர், பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aam aadmi party released the list of candidates while the election has not yet been announced


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->