சாதிச்சண்டை | இரு கிராம இளைஞர்கள் இடையே கடும் மோதல்.! பதற்றம், போலீஸ் குவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஆண்டிபட்டி அருகே இரண்டு கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே இரு கிராமங்கள் இடையே இளைஞர்கள் மோதிக்கொண்ட இந்த விவகாரம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆண்டிப்பட்டி அடுத்த மணியக்காரன் பட்டியில் உள்ள ஒரு மளிகை கடையில், மரவட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பொருட்கள் வாங்கியுள்ளனர்.

அப்போது இரு கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதனால் இரு கிராமத்திலும் ஒரு பதட்டமான ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது. பதற்றத்தை தணிக்கும் வகையில் போலீசார் இரு கிராமத்திலும் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் நான்கு இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல் தெரிய வந்துள்ளது. மேலும் இது சாதி ரீதியான மோதல் என்றும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aandipatti two village youngsters clash


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->