அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் தீவிர வாக்கு சேகரிப்பு! எங்கு தெரியுமா?
actor karthick campaign
தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் கோயம்பத்தூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆதரித்து நடிகர் கார்த்திக் என்று பிரசாரம் மேற்கொண்டார். கோவை, சூலூர் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது அவர் தெரிவித்திருப்பதாவது, இன்றோடு பிரசாரம் நிறைவடையலாம். வாக்குப்பதிவு வருகின்ற 19ஆம் தேதி முடியலாம்.
ஆனால் நம்முடைய எதிர்காலம் அடுத்த 5 ஆண்டுகள் அ.தி.மு.க தான் பார்த்துக் கொள்ளும். கோவை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி அதன் பலன்களை பொதுமக்கள் பெற வேண்டும் என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.