காங்கிரஸில் இணைந்த நடிகர் மன்சூர் அலிகான்.!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் கடத்த ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக பலாபழ சின்னத்தில் போட்டியிட்டார்.

திமுக எதிர்ப்பு காங்கிரஸ் ஆதரவு என பிரச்சாரம் செய்த மன்சூர் அலிகான் பிரச்சாரத்தின் மோரும் குளிர்பானமும் ஒரேசமயத்தில் குடித்ததால் மாராப்பு ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். 

இந்தநிலையில், சத்தியபவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகையை சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான் பேசுகையில், எனது கட்சியான இந்திய ஜனநாயக புலிகள் கட்சியையும் அதன் உறுப்பினர்களையும் காங்கிரஸ் கட்சியில் இணைப்பதற்க்கான கடித்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor mansoor ali khan joined congress party


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->