கர்நாடகா தேர்தல்.. "உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள்.." -நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட்! - Seithipunal
Seithipunal


224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் பதிவான வாக்குகள் வரும் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

கர்நாடகாவில் ஆட்சி பிடிக்க காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது. அதேபோல் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் சில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ் வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வந்து வாக்களித்துவிட்டு சென்று உள்ளார். அந்த வகையில்  பெங்களூர் சாந்தி நகரில் உள்ள தனியார் பள்ளியில் தனது வாக்கினை நடிகர் பிரகாஷ் ராஜ் செலுத்தியுள்ளார்.

வாக்களித்த பின்னர் நடிகர் பிரகாஷ்ராஜ்  உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் "காலை வணக்கம் கர்நாடகா. நான் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக. 40% ஊழல் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளேன். உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள்" என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor prakash raj tweet about Karnataka assembly election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->