ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேவையற்றது.. ஜெயிக்கப்போவது இவர் தான்? - நடிகர் தம்பி ராமையா.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பணி தொடர்ந்து மார்ச் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனை அடுத்து வேட்புமனு, வீட்டு மனுக்கள் மீதான பரிசீலனை ஆகியவை முடிவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, நாதக, தேமுதிக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 76 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தற்போது அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான தம்பி ராமையா கடலூரில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேவையற்றது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் வெற்றி பெறுவார். இதில் எந்த வித மாற்றமும் இல்லை. இது திமுக மற்றும் அதிமுக உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் தெரியும். அரசியல் கட்சிகளின் அனைத்து உழைப்பு முழுவதும் ஈரோட்டில் கொட்டி கிடக்கிறது. மற்ற 233 தொகுதிகளும் தாய் இல்லாத குழந்தையை போல் தவிக்கிறது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor thambi Ramaiya speech about Erode by election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->