தவறான தகவல்..மெட்டா நிறுவனத்துக்கு இந்தியா சம்மன்!  - Seithipunal
Seithipunal


மெட்டா நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்-க்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்,  சமீபத்தில் பேசும்போது, 'கடந்த ஆண்டு தேர்தல்களின் ஆண்டாக இருந்தது என்றும் அப்போது, இந்தியா உள்பட உலகம் முழுவதும் தேர்தல்கள் நடந்தன.என்றும் கொரோனா தொற்றுக்கு பிறகு ஏற்பட்ட சூழல்களை சமாளிக்க முடியாமல், மக்களிடம் எதிர்ப்புகளை பெற்ற ஆளும் கட்சிகள், அந்த தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளன' என்று இந்திய அரசு மீது கருத்து தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மார்க் ஜூக்கர்பெர்க்கின் இந்த கருத்துக்கு, மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மறுப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக, அவர் 'எக்ஸ்'சமூகவலைதள பக்கத்தில் பதிவில் பதிலடி கொடுத்தார்.80 கோடி பேருக்கு இலவச உணவு, இலவச தடுப்பூசிகள் மற்றும் கொரோனா காலத்தில் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு உதவி, வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரமாக இந்தியாவை வழிநடத்துவது வரை, பிரதமர் மோடியின் 3-வது பதவிக்கால வெற்றி, நல்லாட்சி மற்றும் பொதுமக்களின் நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும்" என்று மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மெட்டா நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது . இது குறித்து பாஜக எம்.பியும், நாடாளுமன்றத்தில் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப குழுவின் தலைவருமான நிஷிகாந்த் துபே தனது எக்ஸ் பக்கத்தில் "தவறான தகவலை தெரிவித்தமைக்காக எனது குழு மெட்டா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்ப உள்ளது என்றும் எந்தவொரு ஜனநாயக நாட்டைப் பற்றிய தவறான தகவலும் அதன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும். இந்தத் தவறுக்காக மெட்டா நிறுவனம் இந்திய நாடாளுமன்றத்திடமும் இங்குள்ள மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Misinformation India summons Meta 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->