காங்கிரஸ் கட்சியில் இருந்த பிரபல நடிகை விலகல்! புதிய கட்சியில் இணைந்தார்!
actress jayasudha joined in ysr congress
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் நடிகை ஜெயசுதா. ரஜினி கமல் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். தமிழில் அரங்கேற்றம் படத்தில் தொடங்கி கடைசியாக செக்கச் சிவந்த வானம் உட்பட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
![](https://img.seithipunal.com/media/Jayasudha-u7lcb.JPG)
அவர் அரசியலில் தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து, காங்கிரஸ் கட்சி சார்பில் செகந்திராபாத் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார் இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
![](https://img.seithipunal.com/media/Jayasudha YSR-qlad4.jpg)
ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் YSR காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து அந்த கட்சியில் இணைந்தார். வருகின்ற மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து திட்டமில்லை என்றும், தனது கட்சிப் பணியாற்ற தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
actress jayasudha joined in ysr congress